டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரேதங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றார். ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Related Posts