டெல்லியில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஜாகீர் நகர் பகுதியில் இன்று அதிகாலை அடுக்கு மாடி கட்டடம் ஒன்றில் திடீரெனதீப்பிடித்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தொடர்ந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர்உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Posts