டெல்லியில் நாளை திமுக சார்பில் போராட்டம் : 13 கட்சிகள் பங்கேற்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக நாளை நடத்தும் போராட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்கின்றன.
காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திடவும், அரசியல் கட்சித் தலைவர்களை உடனே விடுதலைச் செய்யக்கோரியும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை காலை 11 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன. மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்கின்றன.  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்றன. தி.மு.க. நடத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, புரட்சிகர சோசலிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று பாரதிய ஜனதா அரசிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க கண்டன முழக்கமிட உள்ளனர்.

Related Posts