டெல்லியில் பாஜக தேசியத் தலைவர்கள் நாளை ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ஆகியோர், நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்த நேரத்திலும்  பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு தேர்தலை எதிர்கொள்ள பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில்  நாளை  நடைபெறவுள்ளது. இதில், தேர்தலை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது குறித்தும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Related Posts