டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்தார்.

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை பதவி ஏற்கவுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்ற வைகோ யஷ்வந்த்சின்கா  உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானியை அவரது வீட்டில்  வைகோ தனது துணைவியார் ரேணுகா தேவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினருடன் நேரில் சந்தித்து ஆசிப் பெற்றார்.

Related Posts