டெல்லியில் மீண்டு புழுதி புயல் – பொதுமக்கள் பாதிப்பு

டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல் ஏற்பட்டதால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி : மே-16

கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கி வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பலத்த காற்றுடன், புழுதியும் சேர்ந்து தாக்கியதால் டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரு தினங்களில் புழுதி புயல் காரணமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி உட்பட 5 வட மாநிலங்களில் 80 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts