டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லியில்,  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts