டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை மட்டும்  இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts