டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்கள் போராட்டம்

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரளான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என அண்மையில் தீர்ப்பு கூறியது. நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே சிலர் தீர்ப்புக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை நிற சேலை அணிந்த திரளான பெண்கள் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதைப்போன்று, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தீர்ப்புக்கு எதிராக ஏராளமானோர் கையில் தீபங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

Related Posts