டெல்லி டேர்டெவில்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி : மே-02

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெற்றியையும், தோல்வியையும் மாறி, மாறி சந்தித்து வருகிறது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts