டெல்லி நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பேர் உட்பட 17- பேர் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற தனியார் நட்சத்திர உணவு விடுதி உள்ளது. இந்த விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தகவல் கிடைத்ததும் சுமார் 26 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின் காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில்கோவையைச் சேர்ந்த அரவிந்த் சிவகுமரன், நந்தகுமார் உள்பட  17 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக தீவிபத்து ஏற்பட்டதை அறிந்து ஜன்னல் வழியாக கீழே குதித்த பெண் மற்றும் அவரது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் சிக்கியிருந்த 34 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள ராம் மனோகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், உயிரிழந்த 17 பேரில் ஏராளமானோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்

Related Posts