டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி

  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  டெல்லி புறப்பட்டு சென்றார்.

      அமமுக துணைப் பொதுச் செயலாளர்  தினகரனை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மறைமுகமாக சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசவுள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார்., பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நாளை சந்தித்துப் பேசும் போது எய்ம்ஸ் மருத்துவமனை, மேகதாது அணை விவகாரம், காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், தினகரன் – ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்தும் முக்கியமாக பேசப்படும் என்று தெரிகிறது.

Related Posts