டெஸ்ட் தரவரிசை- விராட்கோலி 2-வது இடத்தில் நீடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

டெல்லி : ஏப்ரல்-05

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 929 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் விராட்கோலி 912 புள்ளியுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோரூட், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முறையே 3-வது, 4-வது இடத்தில் உள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் 820 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 7-வது இடத்தில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்கிராம் முதல் முறையாக 10 இடத்துக்குள் வந்துள்ளார். அவர் 759 புள்ளியுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Posts