தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்கிறது மத்திய அரசு – சோனியா காந்தி

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் மற்றும் இதர நிபந்தனைகளை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தகவல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையையும், தன்னாட்சியையும் கட்டிக்காப்போம் என்று மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பரவலான கலந்தாலோசனைக்கு பிறகு, நாடாளுமன்றத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, 60 ஆயிரம் ஆண்களும், பெண்களும் அச்சட்டத்தை பயன்படுத்திஉள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்மூலம், அனைத்து மட்டங்களிலும் வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும், இதனால்சமூகத்தின் நலிந்த பிரிவினர் பலன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,  தகவல் ஆணையத்தின்தன்னாட்சியையும், அந்தஸ்தையும் அழிக்க விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றலாம். என நினைப்பதுகுடிமக்களின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந்துவிடும் என்று சோனியா காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Posts