தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிசிசிஐ -சட்ட கமிஷன் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி : ஏப்ரல்-19

சூதாட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, லோதா கமிட்டி இதுகுறித்து பரிந்துரை அளித்திருந்தது. ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவது சாத்தியமா என சட்ட கமிஷன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசிடம் 128 பக்க அறிக்கையை சட்ட அமைச்சம் அளித்துள்ளது. அதில், நாட்டின் எல்லா விளையாட்டுகளும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிசிசிஐக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட கமிஷன் தலைவர் பி.எஸ். சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டால், பிசிசிஐயின் செயல்பாட்டில் வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Related Posts