தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு  அரசியல் சாசனத்திற்கு எதிரானது

தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு  அரசியல் சாசனத்திற்கு எதிரானது  என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

            கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்க வகை செய்யும்  இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 11 பக்க பதில் மனுவில், “கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் எனவும், கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாத நிலை உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று  அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல எனவும்,  ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும்  எனவும் கூறினார். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும் எனவும், தகாத உறவில்  ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு  அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறினர். தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை எனவும்,. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது  எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Related Posts