தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு

கருணாஸ் உள்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.

               அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு  தேதி குறிப்பிடாமல் தீ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி,கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது  நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவர் முடிவு செய்து உள்ளார். கருணாஸ் எம்.எல்.ஏ. முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் மற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களில் பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் மூன்று பேரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பட்டம் ஒன்றில்  முதல் அமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையானர். இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பேனர் வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது ஏன் வழக்கு போடவில்லை எனவும்,. இது குறித்து நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கருணாஸ் கூறினார். முதல்-அமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து கூறி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான  பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு செய்தார். இதையடுத்து 4 உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சட்டப்பேரவைத் தலைவர்தனபால் முடிவு செய்துள்ளார்.

Related Posts