தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து 52 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 26 ஆயிரம் ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கம், ஜூலையில் 27 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. தற்போது 30 ஆயிரத்தை நெருங்கும் வகையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்று கூறப்படுகிறது.

Related Posts