தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 685 ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 480  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 49  ரூபாய் 80 காசுகளுக்கும்,  கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 49 ஆயிரத்து 800 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் முன்னேற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 792  புள்ளி ஒன்பது ஆறு புள்ளிகள் அதிகரித்து 37 ஆயிரத்து  494 ஆக முடிவடைந்தது. தேசியபங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 225  புள்ளி ஐந்து பூஜ்ஜியம் புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து  57 புள்ளிகளாக நிறைவடைந்தது.

Related Posts