தங்கத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 184 ரூபாய் குறைவு

தங்கத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் விலை ஏறத் தொடங்கியது. கடந்த 13ம்  தேதி வரை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் நகை வாங்குவோர் மத்தியில் கடும்  அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 24ம்தேதி  சவரன் விலை 29 ஆயிரத்து 440 ரூபாயாக உச்சம் தொட்டது.  இப்படி தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை நேற்று காலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. ஒரு சவரன் 29 ஆயிரத்து 816-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சவரன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 336 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஒரு சவரன் 184 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 23 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 51,700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனிடையே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2 மாதங்களாக நகைக்கடைகளில் 75 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Posts