தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கம் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலையில் 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் விலை அதிகரித்து 52 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 769 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 562 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 797 புள்ளிகளாக நிறைவு பெற்றது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவை விட குறைந்துள்ள நிலையில் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Related Posts