தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு, சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 38 ரூபாய் உயர்ந்து, மூவாயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் அதிகரித்து, 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை வெகு விரைவில் எட்டி விடும் வேகத்தில் உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Related Posts