தங்கம் விலை ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கு கீழாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கு கீழாக குறைந்துள்ளது.

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 4-ஆம் தேதி காலை ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின் தங்கத்தின் விலை மெல்ல குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் குறைந்து,  3 ஆயிரத்து 618 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து 50 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 176 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts