தங்கம் விலை குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத் தொடங்கியது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தில்  ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. தொடர்ந்து,  தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 597க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 குறைந்து 28 ஆயிரத்து 776க்கு விற்பனையாகிறது. சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 ரூபாய் 30 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts