தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள டிபெஸ்டி மாகாணத்தில் தங்கம் மிகுதியாக கிடைக்கிறது. இதனால் அங்கு பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுத்து வெளிசந்தைகளில் விற்றுவருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் அவர்களை மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Related Posts