தங்க விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 576 ரூபாய்க்கும், சவரன் 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 60 காசுகள் குறைந்து 47 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 34 டாலர் குறைந்து ஆயிரத்து 498 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Related Posts