தஞ்சாவூர் அருகே  பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி உயர்கல்வியை தொடர உதவி கோரிக்கை 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தம்பதியர்  கணேசன் சித்ரா.  கூலித்தொழிலாளிகளான இவர்களது மகள் சஹானா பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயிரி கணிதவியல் பாடப் பிரிவில் படித்து, பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு, 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஹானா, தங்களுக்கு சொந்த வீடு இல்லாத நிலையில், தென்னை மரத்தடியில் குடிசை அமைத்து வசித்து வருவதாகவும்   மின்சார வசதி இன்றி இரவில்  தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து  பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதாகவும் கூறினார்.

‘கஜா’ புயலால் சேதமடைந்த தங்கள் வீட்டை சிலரின் உதவியுடன், சீரமைத்ததாகவும் மருத்துவராக வேண்டும் என்பது தனது கனவு எனவும்  கூறிய அவர் ‘நீட்’ தேர்வு எழுத  தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.  வறுமை நிலையில் உள்ள  தனக்கு உயர்கல்வியை தொடர அரசு மற்றும் அன்புள்ளம் கொண்டோர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Related Posts