தஞ்சையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா ஆலயத்தில், அன்னை பிறப்பு விழா துவங்கியது

தஞ்சை மாவட்டம்,  திருக்காட்டுப்பள்ளியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூண்டி மாதா ஆலயத்தில்,  அன்னை பிறப்பு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை, வாத்திய இசை முழங்க குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டு மாதாவை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் சொருபம் தாங்கிய மல்லிகை பூ வினால் அலங்கரிக்கப்பட்ட மின்சார தேர் பவனி வரும் 8ஆம் தேதி இரவு நடைபெறுகிறது

Related Posts