தஞ்சை: நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

 

 

தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கீழ்வாசல்சாவடியை சேர்ந்த 8 பேர் காரில் திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். தஞ்சை -பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் இன்று அதிகாலையில், அந்த கார் கிரீன்சிட்டி சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.  இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Posts