தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: ஜூன்-26

தமிழக சட்டசபையில் இன்று, போதைப்பொருட்களை விற்பவர்கள் மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். சூழல் கருதியே கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்வதாகவும், பல்வேறு சூழல்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Posts