தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பிளாஸ்டிக் தடையை மீறினால்  ஒரு லட்சம் வரை அபராதம்  விதிக்கப்படும்  என சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Related Posts