தட்டுப்பாடு இல்லாமல் மண்ணெண்ணெய் வழங்கப்படும்

தமிழ்நாட்டுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.

தமிழகத்துக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் ரேஷனில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தையும் தர்மேந்திர பிரதானிடம் அவர் வழங்கினார். இதையடுத்து, தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிரதான் உறுதி அளித்தார். அத்துடன் தமிழகத்துக்கு தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts