தண்ணீர் பிரச்சனையை தீர்க்க  மத்திய-மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்று அவரிடம்  கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

  தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மத்திய,  மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை பேரிடராக கருதி மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்க  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பேசிய தேனி உறுப்பினர் ரவீந்திரநாத், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற  ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் தண்ணீர் பிரச்சனைக்காக நிதி கேட்டது ஏன் என்றும் அவர்  கேள்வி எழுப்பினர்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்த்து குறித்து  கருத்துக் கூற இயலாது என்றும்  அது அவரவரின் விருப்பம்எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரிய கட்சிகளில் இடைநீக்கம் செய்வதும்,  பின்னர்  சேர்ப்பதும் இயல்பு என்றும்  கூறிய திருநாவுக்கரசர்,  காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் குறித்து  கருத்து கூற எதுவும் இல்லை என்று  கூறினார்.

Related Posts