தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

இதுகுறித்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்குஅனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதாக பள்ளி நிர்வாகி உறுதி அளித்த பிறகு தான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சில தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவருவதாகவும், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத் தக்கது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற  நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுசம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் கடமை என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்பாடல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்கமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts