தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார்:  வைகோ புகழாரம் 

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி,  அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு   மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  தன்னுடைய ஊழியர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் ஒரு குடும்பத்தார் போல கலந்து கொள்ளக்கூடிய எளிமையான மனிதர் என்றும் தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.  காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு  சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் என்று அவர்  தெரிவித்தார்.

Related Posts