தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள்,அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும்  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பது அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது எனவும் கூறியுள்ளார். மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிப்பதாகவும், இத்தகைய செயல்பாடுகள் மூலம்,தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை,  கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவம், . தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு  நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.‘

Related Posts