தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது: டோனி

ஐபிஎல் போட்டியில் வேறு எந்த வீரருக்கும் இல்லாத அளவில் டோனிக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. சென்னை மைதானத்தில் மட்டும் அல்லாமல் அவர் செல்லும் இடமெல்லாம் டோனிக்கென்று ரசிகர்கள் கூட்டம் குவிந்து கொண்டுதான் இருக்கிறது.

மும்பையில் நடந்த போட்டியின்போது வயதான மூதாட்டி ஒருவர், “இங்கு நான் வந்திருப்பது டோனி ஒருவருக்காகத்தான்’’ என்ற பதாகை வைத்திருந்தார். போட்டியின் முடிவில் அந்த பெண்மணியை டோனி நேரில் சந்தித்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சென்னைக்கும் டோனிக்கும் எப்போதுமே தொடர்புண்டு எனவும் தனது 2வது வீடு சென்னை என்று டோனி பல முறை கூறியுள்ளார். தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்த்து என்று அவர் மேலும் தெரிவித்தார். உண்மையிலே அவர்கள் என்னை மனதார ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தான் டெஸ்டில் அறிமுகமானது சென்னை மைதானத்தில்தான் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Posts