தனது முதல் பயணத்தை தொடங்கியது நார்வேஜியன் பிலிஸ்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டது.

அமெரிக்கா : ஏப்ரல்-25

கடந்த 2016ஆம் ஆண்டு நார்வேஜியன் பிலிஸ் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ஜெர்மனியில் தொடங்கின. தற்போது இந்தக் கப்பல் நார்வேஜியன் குரூஸ் லைனர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 21ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது. 19 மாடி உயரம் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான நீச்சல்குளம், குளித்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதி, மிகப்பெரிய நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள், அனைத்திற்கும் மேலாக சிறிய ரக கார்கள் ஓட்டி மகிழும் வகையில் ரேஸ் மைதானம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தக் கப்பல் இங்கிலாந்தின் மாண்ட்போர்டு துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

Related Posts