தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது இரண்டரை லட்சம் வரையிலான வருமானம் வரை வரி விலககு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் முதல் .5 லட்சம் ரூபாய் வருவாய்க்கு 5 சதவீத வரியும், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வருவாய்க்கு 20 சதவீத வரியும், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருவாய்க்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பான இரண்டரை லட்சம் என்பதை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல்

பாஜக ஆட்சியில் வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவித்தார். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது எனவும், . வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்,. ஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது எனவும், . நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். . தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Related Posts