தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய மசோதா – ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல்

ஆந்திராவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய மசோதாவை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்தார்.

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது, பள்ளி மற்றும் உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் விதமான மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்தார்.

இதில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்துதல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதோடு இதுதொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Related Posts