தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

 

 

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கோவில்பட்டி, ஏப்ரல்-20 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நே‌ஷ‌னல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட முகாமை தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவியரிடம் பயிற்சி வகுப்புகள் குறித்து, அவர் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் குமார் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் மத்திய அரசின் எந்த ஒரு போட்டி தேர்வையும் துணிவோடு எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருவதாக கூறினார். தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும் எனவும், இது மாணவர் சேர்க்கையின்போது கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts