தனியார் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை

 

 

 

தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என சி.பி.எஸ்.இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, கூடுதல் கட்டணத்தை பெற்றோர் செலுத்தவில்லை என்றால் பள்ளி மூடப்படும் என சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று கூறியிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.  அதில், தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts