தனியார் போர்வெல் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக இருந்த  6 இளைஞர்கள் மீட்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில்வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர்  கொத்தடிமைகளாக இருப்பதாக  மத்தியப்பிரதேச  மாநிலம் பெத்தூர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  புகார் அளித்தனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன்   உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையிலான அதிகாரிகள் க.புதுப்பட்டியில் கொத்தடிமைகளாக இருந்த முகேஷ், தினேஷ், மனோஜ், சுஜஷ், ராம்விலாஸ், ரோசன் ஆகிய 6 இளைஞர்களை மீட்டனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சார் ஆட்சியர் வைத்தியநாதன் மீட்கப்பட்ட 6நபர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு  ஏஜெண்டுகள் மூலம்  வேலைக்கு சேர்ந்த்தாக கூறினார். மேலும் விசாரணையில் இளைஞர்கள் 6 பேருக்கும் எந்தவித ஊதியமும் கொடுக்காமல் ஒரு வேலை உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது எனவும்,  மீட்கப்பட்ட 6 பேருக்கும் உரிய உதவித்தொகை பெற்றுக்கொடுத்து,  உரிய பாதுகாப்புடன் பெத்தூர மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும்  சார் ஆட்சியர் வைத்தியநாதன் கூறினார்.

Related Posts