தனி சட்டம் இயற்றுமாரு அரசுக்கு உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்

சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்றுமாரு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பாரிவேந்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சிலை உடைப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்றும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

Related Posts