தன் மீது எந்த வழக்கு போட்டாலும் எந்த நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிசார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் மீது எந்த வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயார் எனவும், திமுக பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என்று கூறினார்.

Related Posts