தன் மீது பொய் புகார் கூறி வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜாக்குவார் தங்கம்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த ஆண்டு நடைபெற்றது இதில் சங்கத்தின் தலைவராக சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜாகுவார்தங்கம் மற்றும்  ஒன்பது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிலையில் அந்த தேர்தலில் எதிரணியாக செயல்பட்ட திருக்கடல் உதயம் விஜயராகவ சக்கரவர்த்தி  உள்ளிட்ட சிலர்  சங்கத்தை முடக்க வேண்டும் என்ற  நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தங்களை ஜாக்குவார் தங்கம் அணியினர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது இது போன்ற சம்பவம் நடைபெறவில்லை என தெரிய வந்தது.  இந்நிலையில் ஜாக்குவார் தங்கம்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.  அதில்,  தன் மீது பொய் புகார் கூறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts