தமிழகம், புதுவையில்,இரண்டு நாட்கள் வரண்ட் வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

இசூ தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இரு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அதில்  கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts