தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும், இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts