தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடக்கு உள் கர்நாடக பகுதியிலிருந்து, குமரிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts