தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல் சீற்றம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது.

சென்னை : மே-29

கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. கேரளாவில் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ் கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றுடன் கடல் அலைகள் சீற்றமாக உள்ளன.  கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Related Posts